என் கையில் தாமரை வைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.. நடிகை நமீதா பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நமீதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் கையில் தாமரை வைத்துக் கொண்டு பேட்டி அளித்த நிலையில் கையில் ஏன் தாமரை பூவை வைத்திருந்தேன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை நமீதா இன்று பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்த நிலையில் அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய போது ’நான் இன்று என் பிறந்தநாளுக்காக கோவிலுக்கு வந்தேன், தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் இங்கே வரவில்லை, அரசியல் குறித்து இப்போது நான் பேச மாட்டேன்’ என்று கூறினார்.
மேலும் தன் கையில் தாமரை வைப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு ’நான் மகாலட்சுமி அம்மனை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்திருக்கிறேன். இன்று அட்சய திருதியை என்பதால் மகாலட்சுமியை கும்பிட வந்தேன். மகாலட்சுமி போட்டோவில் எப்போதும் தாமரை இருக்கும், அந்த கோவிலில் கொடுத்த தாமரை தான் என் கையில் இருக்கிறது’ என்று விளக்கம் அளித்தார்.
மேலும் தேர்தல் பிரச்சாரம் குறித்து கூறியபோது ‘நான் நேற்று தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தேன். 10 நாட்கள் அங்கே தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் நேற்று மதியம் தான் நான் பிறந்த நாளுக்காக வந்திருக்கிறேன். பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்தவுடன் நான் வேறு சில மாநிலங்களுக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன். குறிப்பாக ஒரிசா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்’ என்று கூறினார்.
தேர்தல் முடிவு கொடுத்து கருத்து கூறிய நமிதா ’பாஜக கண்டிப்பாக மெஜாரிட்டி வரும், நாட்டில் எல்லோரும் பாஜக பாஜக என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்
#WATCH | "பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது"
— Sun News (@sunnewstamil) May 10, 2024
- சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய எழுப்பிய கேள்விக்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா பதில்#SunNews | #BJP | #PrajwalRevanna | #HBDNamitha pic.twitter.com/NfwT3Jsyss
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments