என் கையில் தாமரை வைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.. நடிகை நமீதா பேட்டி..!

  • IndiaGlitz, [Friday,May 10 2024]

நடிகை நமீதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் கையில் தாமரை வைத்துக் கொண்டு பேட்டி அளித்த நிலையில் கையில் ஏன் தாமரை பூவை வைத்திருந்தேன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை நமீதா இன்று பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்த நிலையில் அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய போது ’நான் இன்று என் பிறந்தநாளுக்காக கோவிலுக்கு வந்தேன், தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் இங்கே வரவில்லை, அரசியல் குறித்து இப்போது நான் பேச மாட்டேன்’ என்று கூறினார்.

மேலும் தன் கையில் தாமரை வைப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு ’நான் மகாலட்சுமி அம்மனை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்திருக்கிறேன். இன்று அட்சய திருதியை என்பதால் மகாலட்சுமியை கும்பிட வந்தேன். மகாலட்சுமி போட்டோவில் எப்போதும் தாமரை இருக்கும், அந்த கோவிலில் கொடுத்த தாமரை தான் என் கையில் இருக்கிறது’ என்று விளக்கம் அளித்தார்.

மேலும் தேர்தல் பிரச்சாரம் குறித்து கூறியபோது ‘நான் நேற்று தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தேன். 10 நாட்கள் அங்கே தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் நேற்று மதியம் தான் நான் பிறந்த நாளுக்காக வந்திருக்கிறேன். பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்தவுடன் நான் வேறு சில மாநிலங்களுக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன். குறிப்பாக ஒரிசா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்’ என்று கூறினார்.

தேர்தல் முடிவு கொடுத்து கருத்து கூறிய நமிதா ’பாஜக கண்டிப்பாக மெஜாரிட்டி வரும், நாட்டில் எல்லோரும் பாஜக பாஜக என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்

More News

இன்று அட்சய திருதியை.. தங்கம் வாங்க முடியாதவர்கள் எதை வாங்கினால் செல்வம் சேரும் தெரியுமா!

செல்வம் செழிப்போடு வாழ வழிவகுக்கும் அக்ஷய திருதியை இன்று (மே 10, 2024) நாள் கொண்டாடப்படுகிறது. தங்கம் வாங்குவது தான் இந்த நாளின் சிறப்பம் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தாலும்

விரைவில் நாம் சந்திப்போம்! 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி சொன்ன விஜய்..!

10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர் என்பதும் கிட்டத்தட்ட 92 சதவீதம்

இந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் பாருங்கள்.. சூர்யா பரிந்துரைத்த இன்று ரிலீசான படம்..!

இன்று ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பாருங்கள் என்று நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பரிந்துரை செய்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் 'VD14' பட அறிவிப்பு..! 1854-78 காலகட்டத்தின் நாயகன் கதை..!

விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கிரித்யன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய பான் இந்தியா படம் அறிவிக்கப்பட்டுள்ளது

7 வருடங்களுக்கு பின் விஜய் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற டிவி நிறுவனம்.. 'கோட்' அப்டேட்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தை கவனிக்கும் பணியும்