மீண்டும் கவர்ச்சி களத்தில் இறங்கிய நடிகை நமிதா .. லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Monday,July 31 2023]

நடிகை நமிதா திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நிலையில் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி கிளாமர் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நமிதா. விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் உள்பட பல பிரபலங்களுடன் இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொழில் அதிபர் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமிதாவுக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிறகு திரையுலகில் இருந்து விலகி இருந்த நடிகை நமீதா தற்போது மீண்டும் களத்தில் இறங்கி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடத்திய கிளாமர் போட்டோஷூட் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருவதை அடுத்து மீண்டும் அவர் திரைப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருந்ததாக நமீதா சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஒரு பக்கம் நடிகை நமீதா பாஜகவில் இணைந்து அக்கட்சியில் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.