ஒருசிங்கம் எம்.எல்.ஏ ஆனால் எப்படி இருக்கும்? அண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்த தமிழ் நடிகை

ஒரு சிங்கம் எம்எல்ஏ ஆனால் எப்படி இருக்கும் என அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு தமிழ் நடிகை ஒருவர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த தமிழ் நடிகை நமீதா தற்போது மாநிலம் முழுவதும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் ’இந்த தொகுதியில் ஒரு ஐபிஎஸ் படித்த அதிகாரியே வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நல்லவர், சட்டம் ஒழுங்கு குறித்து அனைத்தும் அறிந்தவர். சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தவர். சிங்கம் மாதிரியான ஒரு போலீஸ் அதிகாரி நம்முடைய தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்றால் அவரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் தாமரையில் வாக்களிக்க வேண்டும்.

அண்ணாமலை வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் சட்டம்-ஒழுங்கு எல்லாம் பாதுகாப்பாக இருக்கும், எல்லாமே சூப்பராக இருக்கும். ஒரு சிங்கமே எம்எல்ஏ வந்தால் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்’ என்று நமிதா பிரச்சாரம் செய்தார்.

 

More News

நீங்க மனசு வச்சா போதும்...! நாசூக்காக வாக்கு சேகரித்த நாட்டாமை..!

மக்களாகிய நீங்கள் மனது வைத்தால், மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சி நிச்சயம் வெற்றி பெரும் என சமக கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

சந்தானம் நடித்த 'டிக்கிலோனா'வுக்கு சென்சார் சான்றிதழ்

நடிகர் சந்தானம் நடித்த 'பாரிஸ் ஜெயராஜ்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த திரைப்படமான 'டிக்கிலோனா' திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது

'தலைவி' ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில், இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தலைவி' திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி

பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு சிறப்பு விருது: வீட்டிற்கு சென்று வழங்கி கெளரவம்!

பிரபல பின்னணி பாடகி பி சுசிலாவுக்கு சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்பட்டது என்பதும் இந்த விருதை அவருடைய வீட்டுக்குச் சென்று இயல் இசை நாடக மன்றத்தின் அதிகாரி வழங்கி கவுரவித்தார்

தமிழகத்தில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு

தமிழகத்தில் கடந்த மாதம் வரை கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது.