கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை நமிதா? அவரே அளித்த விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ் - சைந்தவி என அடுத்தடுத்து விவாகரத்து செய்திகள் வெளிய வந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகை நமீதாவும் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை நமீதா, விஜயகாந்த் நடித்த ’எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய், அஜித் உட்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார் என்பதும் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்ததால் இவரது பல படங்கள் ஹிட் ஆனது.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நமிதா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
மேலும் அவர் பாஜகவில் இணைந்து பணியாற்றினார் என்பதும் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட பாஜக வேட்பாளருக்காக அவர் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நமிதா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் உலா வந்த நிலையில் இது குறித்து அவரை விளக்கம் அளித்துள்ளார். ’நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக வெளியான செய்தியை சில தினங்களுக்கு முன்னர் தான் பார்த்தேன். அதன் பிறகு தான் நான் என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன்.
இருப்பினும் எங்கள் விவாகரத்து செய்தி வதந்தியாக பரவி வருகிறது. எதன் அடிப்படையில் இது போன்ற செய்திகள் வெளியாகிறது என்று எனக்கு புரியவில்லை. ஆனால் அதே நேரத்தில் நடிகையான பின்னர் நிறைய வதந்திகளை சந்தித்து விட்டதால் நானும் என் கணவரும் இந்த வதந்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் இந்த வதந்தியை படித்து சிரித்து மகிழ்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நமிதா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக வெளியான செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments