தடுப்பூசி செலுத்தி கொண்ட பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Thursday,April 08 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை நக்மா என்பதும் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் சமீபத்தில் எடுத்துக்கொண்டேன். இருப்பினும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமை படுத்துக்கொண்டேன். கொரனோ வைரஸ் தடுப்பூசி எடுத்திருந்தாலும் கவனக்குறைவாக இல்லாமல் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று நக்மா கூறியுள்ளார்

நக்மாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்பதை அறிந்தவுடன் அவரது ரசிகர்களும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

More News

அரசு,தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம்...! மத்திய அரசு...!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தகுதியுடைய 100 பணியாளர்கள் இருந்தால் போதும், தனியார் மற்றும்  அரசு அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஸ்டாலினை முந்திய பழனிச்சாமி...! வாக்குப்பதிவுகள் எத்தனை வீதம் தெரியுமா...?

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், வாக்களித்தவர்களின் வாக்குப்பதிவுகள் வீதம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யாபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

'தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக்கதவை' இசைஞானியின் குரலில் 'மாமனிதன்' பாடல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'மாமனிதன்' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் நிலையில்

போஸ்டர் அடிச்சதெல்லாம் வேஸ்ட்டா? அரியர் தேர்வுகளை நடத்த ஐகோர்ட் உத்தரவு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது என்பது தெரிந்ததே.

மீண்டும் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 3986 பேர்களுக்கு புதிதாக கொரோனா