அப்படி நினைக்க வேண்டாமே? கொரோனா கட்டுப்பாடு குறித்து முன்னணி நடிகை அட்வைஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் நடிகையாக இருப்பவர் நடிகை நதியா. கடந்த 1980 இல் “பூவே பூச்சூடவா” படத்தில் அறிமுகமான இவர் 80 ஸ் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். தமிழில் மாஸ் அறிமுகம் கொடுத்த இவர் “உயிரே உனக்காக”, “நிலவே மலரே”, “சின்ன தம்பி பெரிய தம்பி”, “பாடு நிலாவே”, ராஜாதி ராஜா” இப்படி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் அதில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் இன்றைக்கும் தமிழ் சினிமா ரசிர்களுக்கு நடிகை நதியா மீது அலாதி பிரியமும் இருந்து வருகிறது.
அதோடு நடிகை நதியா தமிழ் சினிமா மட்டும் அல்லாது மலையாளம், தெலுங்கு சினிமாவில் நடித்து இருந்தார். இப்படி முன்னணி நடிகையாக இருந்தபோதே கடந்த 1988 இல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதோடு சினிமாவிற்கும் பெரிய முழுக்கு போட்டு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தார்.
இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி“ படத்தில் நடிகை நதியா ரீஎண்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரம், முக்கிய வேடங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தென்னிந்திய சினிமாக்களில் ஒரு முக்கியமான இடத்தை வகித்து வருகிறார். அதோடு பலகாலமாக சமூக வலைத்தளங்களை விட்டு விலகி இருந்த இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னை இணைத்துக் கொண்டு ரசிகர்களிடம் உரையாடியும் வருகிறார்.
அந்த வகையில் தற்போது கொரோனா ஊரடங்கைக் குறித்து “நீங்கள் வீட்டில் முடங்கிப் போய்விட்டதாக நினைக்காதீர்கள், நீங்கள் வீட்டில் பத்திரமாக இருக்கிறீர்கள் என்பது போல நினைத்துப் பாருங்கள்“ எனத் தனது ரசிர்களுக்கு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார். இந்தப் பதிவு சினிமா ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை நதியாவின் இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments