இணையதளங்களில் வைரலாகும் நடிகை நதியாவின் யோகா வீடியோ!

சமீபத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே யோகாவின் சிறப்பு குறித்து உரையாற்றினார் என்பதும் பல திரையுலக பிரபலங்கள் யோகா செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 80கள், 90க்ளில் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நதியாவுக்கு தற்போது 54 வயது ஆகி வரும் நிலையில் இந்த வயதிலும் அவர் மிக நேர்த்தியாக யோகா செய்ததன் காரணமாகவே அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து உள்ளார் என்று நெட்டிசன் கமெண்ட் அளித்து வருகின்றனர், இந்த வீடியோவுக்கு நடிகை நதியா, ‘யோகா நம்மை மன அழுத்தத்தில் இருக்கும் மீட்கும்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நதியா தற்போது ’த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு பதிப்பில் கீதா பிரபாகர் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும், வெங்கடேஷ், மீனா முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை நதியா இரண்டு தெலுங்கு படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் விஜய்: பிரபல இயக்குனர் தகவல்!

ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் விஜய்யை நடிக்க வைப்பேன் என பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார் 

தம்பதியின் தவறான முடிவு....! பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை....!

பெற்றோர்கள் கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச் சென்றதில், மூச்சுத்திணறல் காரணமாக பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு....!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது 7 ஆயிரத்திற்கு குறைந்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளது.

பிதாமகனை மிஞ்சிய சேவை… இடுகாட்டில் கெத்துக்காட்டும் மூதாட்டி!

பொதுவா ஊர் கிராமங்களில் உள்ள இடுகாடுகளில் வெட்டியான் இருப்பதைப் பார்த்து இருப்போம்.

உலகிலேயே சொந்தமாக ரயில் வைத்து இருந்த சொகுசு தமிழர்… சிறப்பான வரலாற்றுப் பக்கங்கள்!

தனி விமானம் பயன்படுத்தும் இந்தக் காலத்தில்கூட யாரும் ஒரு ரயிலைச் சொந்தமாக வைத்து இருப்பதில்லை