நதியாவின் ஃபிட்னெஸ்-க்கு இதுதான் காரணமா? வைரல் வீடியோ
- IndiaGlitz, [Tuesday,July 27 2021]
கடந்த 1985ஆம் ஆண்டு ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன்பிறகு நடிகை நதியா, ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சிவகுமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்பதும், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நதியா கடந்த 1988 ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் என்பதும் அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அப்போது அவர் ஹீரோயினாக இருந்த போது எப்படி இருந்தாரோ அதே போல இருந்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். தற்போதும் அவர் தனது உடலை ஃபிட்டாக வைத்து இருக்கிறார் என்பதும் அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் கூட தற்போது வயதான தோற்றத்தில் இருக்கின்றனர் என்பதும் சமீபத்தில் வெளியான புகைப்படம் உறுதி செய்தது.
இந்த நிலையில் நதியாவின் பிட்னஸ்க்கு அவரது ரெகுலரான டற்பயிற்சி தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரெகுலரான உடற்பயிற்சி என்பது உங்கள் உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் நிம்மதியை கொடுக்கும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் நதியா தற்போது ’த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.