ஒலிம்பிக் வீராங்கனையுடன் நடிகை நதியா… கூடவே உருக்கமான கேப்ஷன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து இரண்டு முறை தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்து. ஹைத்ராபாத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேபோல சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
இதனால் தொடர்ந்து ஒலிம்பிக் தொடரில் இரண்டுமுறை பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக் வெற்றி வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு இந்திய ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
அந்த வகையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் பி.வி.சிந்துவிற்கு பாராட்டு விழா ஒன்றை நடத்தி இருந்தார். அந்த விழாவில் பல திரைத்துறை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதி சமீபத்தில் பி.வி.சிந்துவிற்கு விருந்து வைத்து வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் 80 கள் முதல் கொடிகட்டி பறந்துவரும் நடிகை நதியா, ஒலிம்பிக் வீராங்கனை பி.வி.சிந்துவோடு செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். கூடவே “இது எனக்கு மிகப்பெரிய தருணம். ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து பேட்மிண்டன் வீராங்கனை என்ற முத்திரைக்கு சொந்தக்காரர். களத்தில் கொஞ்சம்கூட பயம் இல்லாமல் விளையாடக் கூடியவர்” என்று உருக்கமான பதிவோடு நடிகை நதியா செல்பி புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.
இந்நிலையில் எவர்கிரீன் நடிகை நதியா, பி.வி.சிந்துவோடு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை நதியா இயக்குநர் லிங்குசாமி தெலுங்கில் இயக்கிவரும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com