கமல்ஹாசனுடன் இனியாவது நடிக்க வாய்ப்பு உள்ளதா? நதியாவின் க்யூட் பதில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நதியா தமிழ் சினிமாவில் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். இடையில் சில ஆண்டுகள் இடைவெளி விட்டாலும் அவர் தமிழ் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தல தோனி தயாரிப்பில் ’எல்ஜிஎம்’ என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் அம்மாவாக நதியா நடித்துள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் கோவையில் உள்ள கல்லூரியில் நடந்த போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஆக்சன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது, விரைவில் அது நடக்கும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். அரசியலில் குதிக்க வாய்ப்பு இல்லை, ஆனால் அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன் என்றும் இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார்.
உங்கள் இளமையின் ரகசியம் என்ன என்று கேட்டதற்கு அனைத்தும் உங்கள் அன்பு தான் காரணம் என்று கூறிய நதியா, என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், ஆனால் முதல் மாடியாக இருந்தாலும் லிப்ட் பயன்படுத்தாமல் நடந்து செல்லுங்கள், இதுதான் என்னுடைய டயட் என்று கூறினார்.
இறுதியாக இத்தனை வருடங்களாக கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை இனிமேல் நடிப்பீர்களா என்று கேட்டபோது ’அவரும் இப்போது நடித்துக் கொண்டுதான் இருக்கிறார், நானும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன், இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து கமல்ஹாசன் உடன் விரைவில் நதியா நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நடிகை நதியா திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சிவகுமார், மோகன், சுரேஷ் என பல பிரபலங்களுடன் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் உடன் அவர் நடிக்கவில்லை கமலுடன் நடிக்க ஒரு சில வாய்ப்புகள் நதியாவுக்கு வந்ததாகவும் ஆனால் அவர் அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்ததாகவும் கூறப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments