close
Choose your channels

20 வயது இளம்பெண் போல் நடிகை நதியா.. சுவிட்சர்லாந்து சுற்றுப்பயண சூப்பர் புகைப்படங்கள்..!

Saturday, September 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நதியா தற்போது 57 வயதில் இருக்கும் நிலையில் அவர் 20 வயது இளம்பெண் போல் சுவிட்சர்லாந்து நாட்டில் துள்ளி குதித்து விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

நடிகை நதியா கடந்த 1985 ஆம் ஆண்டு ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் தமிழில் ஏராளமான படங்கள் நடித்தார் என்பதும் அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணம் மற்றும் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி ஆன நதியா தற்போது வரை சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நதியாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் 57 வயதிலும் அவர் இன்னும் டீன் ஏஜ் பெண் போல் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில், அங்குள்ள ரயிலில் இருந்து இறங்குவது, காடுகளில் ட்ரக்கிங் செல்வது, உள்பட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment