குறிபார்த்து அடித்த நதியா: படப்பிடிப்பின் இடையே எடுத்த வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,March 21 2023]

நடிகை நதியா வில்லிலிருந்து குறி பார்த்து அம்பை விட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது .

தமிழ் திரையுலகில் கடந்த 80ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் நதியா என்பதும் அவர் ரஜினிகாந்த் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார் என்பதும் தெரிந்தது .

இந்த நிலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணமான பின்னர் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்தார் என்பதும் அதன் பின் மீண்டும் 2004 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தோனி தயாரிப்பில், ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி வரும் ’எல்.ஜி.எம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நதியா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’எல்.ஜி.எம்’ படப்பிடிப்பின் இடைவெளியில் வில்லிலிருந்து குறிபார்த்து அம்பு விடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் உட்பட பலர் லைக்ஸ் செய்துள்ளனர்.