அன்னையர் தினத்தில் நதியாவின் பதிவு.. அருகில் இருப்பது அவரது சகோதரியா?
- IndiaGlitz, [Sunday,May 12 2024]
இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் அரசியல் தலைவர்களும் அன்னையர் தின வாழ்த்துக்களை தங்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கடந்த 80களின் கனவு கன்னியாக இருந்த நடிகை நதியா தனது அன்னையர் தின வாழ்த்துக்களை பதிவு செய்து தாயார் மற்றும் சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் அவர் அனைவருக்கும் எனது இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள், என் அன்னை ஒரு சிறந்த, அற்புதமான, விதிவிலக்கான மனிதர் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்பினேன், அவரது மகள்களை போல’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நதியா பதிவு செய்த புகைப்படத்தில் அவரது தாயாரும் சகோதரியும் இருக்கும் நிலையில் நதியா போலவே அவரது சகோதரியும் இளமையுடன் உள்ளார் என கமெண்ட் பதிவாகி வருகிறது.
1985 ஆம் ஆண்டு ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நதியா, அதன் பிறகு ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த நிலையில் 1988 ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட பின் திரையுலகில் இருந்து கிட்டத்தட்ட விலகினார்
அதன் பிறகு அவர் மீண்டும் 2004 ஆம் ஆண்டு ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நதியா தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், கடந்த ஆண்டு கூட தல தோனி தயாரிப்பில் உருவான ’எல்.ஜி.எம்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.