38 ஆண்டுகால திரையுலகில் முதல்முதலில் நதியா செய்த வேலை: வைரல் பதிவு!

  • IndiaGlitz, [Monday,April 11 2022]

38 ஆண்டுகால திரை வாழ்வில் முதல் முதலாக நடிகை நதியா தெலுங்கில் சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளதாகவும் இது குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நதியா கடந்த 1984ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். தமிழில் ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதன் பிறகு பல தமிழ் படங்களிலும், தெலுங்கு மலையாளம் திரைப்படங்களிலும் நடித்தார் .

இந்த நிலையில் தற்போது நதியா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று Ante Sundaraniki. தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தில் நானி மற்றும் நஸ்ரியா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நதியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் முதலாக இந்த படத்திற்காக தெலுங்கில் சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளதாகவும், எனக்கு ஊக்கம் அளித்த இயக்குனர் மற்றும் குழுவினருக்கு எனது நன்றி என்றும் நதியா தெரிவித்துள்ளார். தெலுங்கில் முதல் முதலாக நிறைய சொந்த குரலில் டப்பிங் செய்த நதியாவுக்கு படக்குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.