close
Choose your channels

'ஆனந்தம்'.. ஆன்மீக பயணத்தில் 'சீதாராமம்' நடிகை.. பக்திமயமான புகைப்படங்கள்..!

Saturday, October 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆனந்தம் என்ற தலைப்பில் ஆன்மீக பயணம் செய்த புகைப்படங்களை ‘சீதாராமம்’ நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த பக்தி மயமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

மராத்தி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை மிருணாள் தாக்கூர், "சீதாராமம்" என்ற படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து தற்போது அவர் "கல்கி 2898" உள்ளிட்ட சில படங்களில் நடித்த நிலையில், தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாக்கூருக்கு 13 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஜகதீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அதை பற்றிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்டுகள் கிடைத்துள்ளன.

மிருணாள் தாக்கூர் பல கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்திருந்த போதிலும், அதைவிட அதிகமாக அவரது ஆன்மீக பயண புகைப்படங்களுக்கு லைக்குகள் கிடைத்துள்ளது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment