வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது இப்போதும் இருக்கிறது? ஓப்பனாக சாடிய பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தி சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக இருந்துவரும் முக்கிய நடிகை ஒருவர் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசிய நிலையில் அதுபோன்ற சூழல் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறது எனக் கூறியிருக்கும் தகவல் ஊடகங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
பாலிவுட் தொலைக்காட்சியில் ‘ஜஸ்ஸி ஜெய்சி கோயி நஹி’ எனும் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை மோனோ சிங். இவர் நடிகர் மாதவன், கரினா கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘3 இடியஸ்‘ போன்ற பல திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபலமானர். மேலும் சமீபத்தில் நடிகர் அமீர்கான நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘லால்சிங் சித்தா’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை மானோ சிங் தற்போது ‘கஃபாஸ்’ எனும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். அதில் பொழுதுபோக்கு துறையினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு சிறுவனுக்குத் தாயாக நடித்துள்ளார். சமீபகாலமாக பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல்கள் குறித்து சினிமா துறை அதிக கவனம் செலுத்திவரும் நிலையில் நடிகை மோனோ சிங் நடித்திருக்கும் வெப் சீரிஸ் பெரிய எதிர்பார்ப்பை எற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து நடிகை மோனோ சிங்கிடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் காஸ்டிங் கவுச் பிரச்சனையை சந்தித்துள்ளீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், நான் ஜாஸ்ஸி-யில் நடிப்பதற்கு முன்பே நடந்தது. நான் புனேவில் இருந்து பம்பாய்க்கு ஆடிஷனுக்கு வந்து கொண்டிருந்த நேரம் அது. என்னை அசௌகரியமாகவும் மிகவும் வித்தியாசமாகவும் பயங்கரமாகவும் உணரச் செய்த சிலரை நான் சந்தித்தேன்.
பெண்கள் அப்பாவியாக இருந்தாலும் அல்லது பாதிக்கப்படக் கூடியவர்களாக இருந்தாலும் அல்லது அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் அவர்களின் அவர்களின் கணிப்பு ஒருபோதும் தவறாது. எனவே நான் மிகவும் சங்கடமான சூழ்நிலையில் இருக்கிறேன் என்பதை நான் அறிந்தேன். நான் எப்படி அங்கிருந்து வெளியேறி என்னைக் காப்பாற்றுவது? அது மட்டும்தான் என் மனதில் நடந்து கொண்டிருந்தது? என தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் இது சினிமா துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் நடக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆனால் உங்களுக்கு தெரியும் வாழ்க்கையில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்ய இதுபோன்ற விஷயங்கள் தடையாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்போது நிச்சயமாக அது இன்னும் உள்ளது என்று காஸ்டிங் கவுச் குறித்து கூறிய அவர் சினிமா துறையில் மட்டுமல்ல, இது எல்லா இடங்களிலும் உள்ளது. மேலும் இது தனிப்பட்ட விருப்பமாக மாறிவிட்டது என்று கூறியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக ‘கபி ஹான் கபி நா’ படத்தில் நடித்து பிரபலமான நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பாளர் ஒருவர் இரவு ஹோட்டலில் தங்கச் சொன்னார் என்று தனக்கு நடந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
தற்போது நடிகை மோனோ சிங் வாய்ப்புக்காக அலைந்தபோது தன்னை சுற்றியிருந்த நபர்களால் சங்கடத்திற்கு தள்ளப்பட்டேன். ஆனால் இதையும் தாண்டி தற்போது சினிமாவில் சாதித்துள்ளேன், அதேபோல உங்களது கனவை இது தகர்த்துவிடக்கூடாது எனக் கூயிருக்கும் கருத்துகள் ரசிகர்களிடையே பாராட்டை குவித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments