கொரோனா குணமாகாமல் வீட்டுக்கு சென்ற பிரபல நடிகை: பெரும் பரபரப்பு 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை ஒருவர் கொரோனா நெகட்டிவ் என்ற ரிசல்ட் வருவதற்கு முன்னரே வீட்டுக்குச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரை உலகிலும் பாலிவுட் சின்னத்திரை உலகிலும் புகழ்பெற்ற நடிகையாக விளங்கி வருபவர் மோகன குமாரி சிங். இவர் குடும்பத்துடன் டேராடூனில் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு திடீரென கொரொனா வைரஸ் அறிகுறி இருந்தது. இதனையடுத்து அவர் தனது குடும்பத்தோடு ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தபோது அனைவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

ரிஷிகேஷ் மருத்துவமனையில் மோகனகுமாரி சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நடிகை மோகனகுமாரி சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென வீட்டுக்கு திரும்பி வந்ததாக செய்திகள் வெளிவந்தது. இதனை மோகனகுமாரி சிங் தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்தார். அதில் அவர், ‘நாங்கள் இப்போது வீட்டுக்கு திரும்பி விட்டோம் என்றாலும் வீட்டிலேயே நாங்கள் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கின்றோம். நாங்கள் 10 நாட்களாக மருத்துவமனையில் இருந்தோம். 5 நாட்கள் வரை எங்கள் உடலில் கொரோனா வைரஸ் இருந்திருக்கலாம் ஆனால் தற்போது நாங்கள் நலமாக இருக்கிறோம் என்றும், இருப்பினும் இன்னும் சில நாட்களில் நாங்கள் இதிலிருந்து முழுமையாக குணமாகி விடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் நெகட்டிவ் ரிசல்ட் வரும் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில் திடீரென மோகனகுமாரி சிங் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு சென்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

More News

தோனிதாங்க பெரிய சூப்பர் ஸ்டார்- இப்படி சொன்னது யார் தெரியுமா???

இந்திய கிரிக்கெட் அணியின் லெஜண்டாக கருதப்படும் தோனி சில ஆண்டுகளாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியிருக்கிறார்.

புதிய வைரஸால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு: என்ன நடக்கிறது சீனாவில்?

சீனாவிலுள்ள வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் சீனா முழுவதும் மிக வேகமாக பரவி அந்நாட்டில் பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தியது.

தளபதி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்த வைத்த 21 பிரபலங்கள்

தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதிக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை சமூக வலைதளங்கள் மூலம் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்

இந்த அறிகுறி இருந்தாலும் உங்களுக்கு கொரோனாவாக இருக்கலாம்!!! அதிர்ச்சியூட்டும் புதுத் தகவல்!!!

கொரோனா நோய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது அறிகுறிகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவால் மறைந்த தொண்டருக்கு கமல்ஹாசனின் வீரவணக்கம் கவிதை

கொரோனாவால் பலியான தனது கட்சியின் தொண்டருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் அவர்கள் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்