கணவரைக் கட்டிபிடித்தப்படி “ஸ்கை டைவ்“ அடித்த பிரபல நடிகை… வைரல் வீடியோ!

தமிழில் நடிகர் ஆர்யாவின் தம்பி நடிகர் சத்யா நடித்த திரைப்படமான “அமரகாவியம்” திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ். இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் விஷ்ணுவுடன் இணைந்து “இன்று நேற்று நாளை” எனும் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். இதனால் “வெற்றிவேல்“, “எமன்“ போன்ற ஒரு சில படவாய்ப்புகள் கிடைத்தன.

நடிகை மியா ஜார்ஜ்க்கு தமிழில் குறைவான வாய்ப்புகள் கிடைத்தாலும் மலையாளத்தில் பல நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று அங்கு எல்லோருக்கும் அறிமுகமான நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த ஆண்டு கேரளாவைச் சேர்ந்த அஸ்வின் பிலிப் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜ் தனது கணவர் அஸ்வினுடன் ஜெட் விமானத்தில் இருந்து ஸ்கை டைவ் அடித்துள்ளார். இதில் சிறிது கூட பயப்படாத நடிகை மியா உற்சாகமாக பறந்துவரும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. இதுகுறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு அதிகப் படங்களில் நடிக்காத நடிகை மியா தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி “கோப்ரா“ படத்தில் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.