என்னுடைய மரணத்திற்கு இன்னும் யார் யாரெல்லாம் இரங்கல் தெரிவிக்கவில்லை: ஆபாச நடிகையின் பரபரப்பு டுவீட்

  • IndiaGlitz, [Saturday,June 27 2020]

ஆபாச பட நடிகை சன்னி லியோன் போலவே, ஆபாச திரையுலகில் பெரும் புகழ்பெற்றவர் மியா கலிஃபா. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆபாச தொழிலில் இருந்து விலகி விட்டதாகவும் விளையாட்டு வர்ணனையாளராக மாறிவிட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார்

இந்த நிலையில் திடீரென வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் இருந்த காரணத்தினால் மன அழுத்தம் காரணமாக மியா கலிஃபா தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவியது. இதை உண்மை என நம்பி மியா கலிஃபா ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவருடைய நண்பர்கள் சிலரும் இதனை நம்பி பூங்கொத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மியா கலிஃபா தனது டுவிட்டர் பக்கத்தில் தான் நலமாக இருப்பதாகவும் தனது நண்பர்கள் யார் யாரெல்லாம் எல்லாம் இன்னும் பூங்கொத்து கொடுக்கவில்லை என்பதை கவனித்து கொண்டிருப்பதாகவும் நகைச்சுவையுடன் பதிலடி கொடுத்துள்ளார். மியா கலிஃபா சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் அதனால் தான் அவர் சமூக வலைதளம் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும் தலைகாட்டாமல் இருந்ததாகவும், இதனை பயன்படுத்தி யாரோ சிலர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தியை பரப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

ஆனால் தனது தற்கொலை குறித்த வதந்திக்கு தனது டுவிட்டரில் ஸ்மார்ட்டாக பதிலளித்துள்ள மியா கலிஃபாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

More News

இவங்களுக்கு நாங்கள் விசா கொடுக்கவே மாட்டோம்: ஓர வஞ்சனை காட்டும் அமெரிக்கா!!!

அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

சாத்தான்குளம் விவகாரத்திற்கு குரல் கொடுத்த கோலிவுட் திரையுலக பிரபலங்கள்!

சாத்தன்குளம் தந்தை மகன் மரணம் குறித்த கொடூர சம்பவத்திற்கு இதுவரை இல்லாத வகையில் கோலிவுட் திரையுலகினர் கொதித்தெழுந்து தங்களுடைய கருத்துக்களை ஆவேசமாக பதிவு செய்துள்ளனர்.

தமிழக ஊடகத்துறையில் கொரோனாவிற்கு முதல் பலி. அதிர்ச்சி தகவல்

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நம்ம ஊரு எவ்வளவோ தேவலைன்னு நினைச்சேன்: சாத்தான்குளம் விவகாரம் குறித்து நிவேதா பெத்ராஜ்

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற பகுதியில் சமீபத்தில் ஜெயராஜ், அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் பத்து நிமிடம் கடை திறந்து வைத்ததால்,

ஆறே நாட்களில் ஒரு லட்சம், 5 லட்சத்தை கடந்த இந்திய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.