close
Choose your channels

கணவருடன் சமீபத்தில் திருமணமான தமிழ் நடிகை: வைரல் புகைப்படம்!

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் நடிகை ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தற்போது கணவருடன் அந்த நடிகை இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது

தமிழில் ஆர்யாவின் சகோதரர் நடித்த ’அமரகாவியம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ். அதன் பின்னர் விஷ்ணு விஷாலின் ’இன்று நேற்று நாளை’ சசிகுமாரின் ’வெற்றிவேல்’ தினேஷின் ’ஒரு நாள் கூத்து’ விஜய் ஆண்டனியின் ‘எமன்’ உள்பட ஒருசில படங்களில் மியா ஜார்ஜ் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மியா ஜார்ஜுக்கும் அஸ்வின் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் கணவருடன் மியா ஜார்ஜ் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் பொருத்தமான ஜோடி என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment