நடிகை மேக்னா ராஜின் அம்மா, கமல்-ரஜினி பட நடிகையா? ஆச்சரிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்பதும் அப்போது கர்ப்பமாக இருந்த மேக்னாராஜ்க்கு அதன் பின்னர் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே. தற்போது அந்த குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது மேக்னா ராஜ் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் நடிகை மேக்னா ராஜ் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் ஆச்சரியமடைந்தனர். மேக்னாராஜின் அம்மா பரிமளா ஜோஷ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் சில படங்களிலும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது தான் அந்த ஆச்சரியத்திற்கு காரணம்.
ரஜினிகாந்த், சரிதா நடிப்பில் கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான ’தப்புத்தாளங்கள்’ என்ற படத்தில் மேக்னா ராஜின் அம்மா பரிமளா ஜோஷ் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி வது விஜயகாந்த் நடிப்பில் சுந்தர்ராஜன் இயக்கிய ’வைதேகி காத்திருந்தாள்’ என்ற படத்திலும் வைதேகி என்ற கேரக்டரில் இவர் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகள் தான் மேக்னாராஜ் என்ற தகவல் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments