'வர்மா' டிராப்: அதிர்ச்சியில் நாயகி மேகா செளத்ரி

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, சென்சார் சான்றிதழ் பெற்ற பின், ரிலீசுக்கு ஒருசில நாட்கள் இருக்கும்போது திடீரென அந்த படத்தை கைவிட்டு மீண்டும் புதியதாக படப்பிடிப்பு நடத்தபோவதாக அறிவிக்கப்பட்ட ஒரே படம் 'வர்மா' படமாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த செய்தியை கேட்டு கோலிவுட்டே அதிர்ந்த நிலையில் படக்குழுவினர்களில் ஒருசிலர் இன்னும் இதனை நம்பாமல் உள்ளனர். குறிப்பாக நேற்று பிறந்த நாளை கொண்டாடிய இந்த படத்தின் நாயகி மேகா செளத்ரி, 'என்னுடைய பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த செய்தி எனக்கு வந்தது. இதனை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இந்த படம் டிராப் என்பது குறித்த தகவல் இன்னும் எனக்கு முறையாக வரவில்லை. விரைவில் படக்குழுவினர்களை சந்தித்து இதுகுறித்து பேசுவேன்' என்று கூறினார்.

'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் படமாக உருவாகிய 'வர்மா' படத்தில் ஷாலினி ஷிண்டே வேடத்தில் மேகா நடித்திருந்தார். மீண்டும் புதியதாக உருவாக்கப்படும் படத்திலும் துருவ் ஜோடியாக மேகா நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.