காதலரை கைப்பிடித்த நடிகை மேகா ஆகாஷ்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Sunday,September 15 2024]

நடிகை மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உள்பட பலர் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று சிறப்பான முறையில் மேகா ஆகாஷ் திருமணம் நடைபெற்றது. இதில் பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது

ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ சிம்பு நடித்த ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ’மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு என்பவரை காதலித்த நிலையில் அவரை திருமணம் செய்ய போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். நேற்று கூட அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஹந்தி நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றதை அடுத்து பல திரை உலக பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.