போதைப்பொருள்.....உல்லாசம்..ஆபாச பேச்சு .....! மீராவுக்கு உதவியதால் சிக்கிய பிரபல தோழி....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பட்டியலினத்தவரை இழிவாக பேசியதால் மீரா மிதுன் மீது, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ள நிலையில், குண்டார்ஸ் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மீராவுக்கு பின்னணியில் இருந்தே பல செயல்களுக்கும் உதவிய அவரது தோழியும், சிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு....!
ஆபாச பேச்சில் போலீசுக்கே சவால் விட்ட சூப்பர் மாடல் மீரா மிதுன், தனது ஆண் நண்பருடன் தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
சர்ச்சைகளில் சிக்கியே பிரபலமான மீரா மிதுன், பிற நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாக பேசுவதையே வழக்கமாகவும், வாடிக்கையாகவும் வைத்திருந்தார். அண்மையில் பட்டியலின மக்கள் குறித்தும், தன் முகத்தை மற்றவர்கள் காப்பி அடிக்கிறார்கள் என்றும் கூச்சமே இல்லாமல், அசிங்கமாக பேசியிருந்தார். நெட்டிசன்களிடம் இருந்து வாங்கிக்கொண்ட பிறகும், அடாவடி செய்த மீரா, நேரு காந்தி-லாம் ஜெயிலுக்கு போகலயா. இப்படி தான் 5 வருஷமாக என்னை கைது செய்யுறேன்-னு சொல்றாங்க. ஆனால் என்னை பிடிக்கமுடியாது என்று வீடியோ வெளியிட்டு, தலைமறைவானாள். பலரும் அளித்த புகாரின் பேரில், இப்படி அட்ராசிட்டி செய்யும் மீராவை கேரள ஆழப்புழா விடுதியில் வைத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அங்கிருந்து சென்னை அழைத்து வரும் வழியில் காவல் துறையினரை ஒருமையாக பேசிய மீரா, இங்கு வந்தவுடன் என்னை போலீசார் கொடுமை படுத்துறாங்க என்று கூறி நாடகமாடினார். வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட மீராவுக்கு, உதவிய இருந்த அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்-ம் கைது செய்யப்பட்டான்.
லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வரும் இந்த அட்ராசிட்டி ஜோடிகள், பல நட்சத்திர விடுதிகளில் தங்கி போதைப்பொருள் பயன்படுத்தி உல்லாசமாக இருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. வழக்குகளில் இருந்து தப்பிக்க மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி மோசடிகளை வேலைகளை செய்வதற்கு, மீராவுக்கு உதவியாக பிரபல பெண் தோழி ஒருவர் இருந்துள்ளார். இந்த பெண்ணும் கூடிய விரைவில் சிக்க வாய்ப்புள்ளதாகவும், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.
போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு ஒத்துழைப்பு தராமல் மாற்றி, மாற்றி பதில் கூறியும், கூச்சலிட்டும் அடாவடித்தனம் செய்துள்ளார் மீரா. இதனால் காவலில் எடுத்து விசாரிக்கையில், மன நல மருத்துவரை வைத்தே விசாரிக்க காவல் துறையினர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Darshan Vignesh
Contact at support@indiaglitz.com
Comments