40 வயதிலும் கிளாமரில் கலக்கிய விஜய், விஷால் பட நடிகையின் புதிய பட அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய், விஷால் படங்கள் உள்பட பல படங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு தற்போது 40 வயது ஆகி வரும் நிலையில் இந்த வயதிலும் அவர் தனது சமூக வலைதளத்தில் கிளாமர் புகைப்படங்களை சில மாதங்களாக பதிவு செய்து கலக்கி வந்தார். அவரது கிளாமர் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வந்தன. இந்த நிலையில் கிளாமர் புகைப்படங்களுக்கு கிடைத்த பலனாக தற்போது அவர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’ரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் அவர் விஜய்யுடன் ’புதிய கீதை’ விஷாலுடன் சண்டக்கோழி’ உள்பட பல வெற்றி படங்களில் நடித்தார் என்பதும் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளாக இருந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்காமல் இருந்த மீராஜாஸ்மின் தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்திற்கு ’விமானம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று மீரா ஜாஸ்மினின் பிறந்தநாளை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஹீரோ, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments