இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லையா? வெட்டுக்கிளி விவகாரம் குறித்து தமிழ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் பிரச்சினை தலைவிரித்து ஆடி வரும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க முடியாமல் திணறி வருகின்றனர் வட மாநிலங்களில் இந்த வெட்டுக்கிளியின் படையெடுப்பு இருந்ததை அடுத்து தற்போது தமிழகத்திலும் வெட்டுக்கிளிகள் வந்துவிட்டதாகவும் ஊட்டி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இந்த வெட்டுக்கிளிகள் அட்டகாசம் தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு பக்கம் வெட்டுக்கிளிகள் விவசாயிகள் நிலத்தை பாழடித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வெட்டிக்கிளிகளை பைகளில் பிடித்து அதை உணவுக்காக விற்பனை செய்துவரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நடிகை மீரா சோப்ரா ’வெட்டுக்கிளிகளை உணவுக்காக விற்பனை செய்யும் வீடியோவை பார்த்தேன். இது உண்மைதானா? உண்மையிலேயே மனிதர்கள் வெட்டுக்கிளிகளை இன்னும் சாப்பிடுகிறார்களா? கொரோனாவிடம் இருந்து இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லையா? என்று ஆவேசமாக கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகை மீரா சோப்ரா தமிழில் எஸ்ஜே சூரியாவுடன் ‘அன்பே ஆருயிரே’ சிபிராஜின் ‘லீ’, போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரரிதான் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Got this forward. Is this video actually genuine? People are really eating #locusts. Havent they learnt their lesson with the ongoing #coronavirus !!! #shocking pic.twitter.com/QBhFdYU2pN
— meera chopra (@MeerraChopra) May 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments