நாக சைதன்யா வீட்டுக்கு மருமகள் ஆகிறாரா மீனாட்சி செளத்ரி? அவரே அளித்த விளக்கம்..!
- IndiaGlitz, [Friday,November 22 2024]
விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரி, நாக சைதன்யா உறவினர் வீட்டிற்கு மருமகளாக போவதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்த ’கொலை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி, அதன் பின்னர் விஜய் நடித்த ’கோட்’ மற்றும் துல்கர் சல்மான் நடித்த ’லக்கி பாஸ்கர்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது, அவர் தென்னிந்திய திரையுலகின் பிஸியான நடிகையாக விளங்குகிறார். இந்த நிலையில் இன்று அவர் நடித்த ’மெக்கானிக் ராக்கி’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான புரமோசன் நிகழ்ச்சியில் நேற்று அவர் கலந்து கொண்ட போது, தனது காதல் கிசுகிசு குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: காதல் வதந்திகள் எப்படி பரவுகின்றன எனக்கு தெரியவில்லை. ’சலார்’ படத்தில் நடிப்பதாகவும், ’விஸ்வாம்பரா’ படத்தில் நடிப்பதாகவும் வதந்தி கிளம்பியது. இப்போது என்னைப் பற்றி காதல் செய்தி வதந்தியாக மாறிவிட்டது. நான் இப்போதைக்கு திருமணம் செய்யப்போவதில்லை. சிங்கிளாகவே இருக்கிறேன். யாருடனும் மிங்கிளாக தயாராக இல்லை. என்று கூறியுள்ளார்.
இதனடிப்படையில், மீனாட்சி சவுத்ரி காதல் பற்றிய அனைத்தும் வதந்திகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.