இரட்டைத் தேவதை… நகல் போல இருக்கும் மகளுடன் நடிகை மீனா நடத்திய போட்டோஷுட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 80களில் கதாநாயகியாகக் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை மீனா. பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்த இவர் அந்தகால இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாகவே வலம்வந்தார். மேலும் அஷ்ட லட்சணங்களும் பொருந்திய நடிகை என்று ரசிகர்கள் மத்தியல் வரவேற்பை பெற்றிருந்தார்.
திருமணத்திற்குப் பிறகு குறைந்த படங்களில் நடித்துவந்த இவர் சமீபத்தில் மலையாளத் திரைப்படமான “த்ருஷ்யம்“ படத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. பின்னர் “த்ருஷ்யம் 2“ திரைப்படத்தில் நடித்த இவர், இதன் தெலுங்கு ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “அண்ணாத்த“ படத்திலும் கலக்கியிருந்தார்.
தற்போது “ரவுடிபேபி“ போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை மீனா சமூகவலைத் தளங்களிலும் படு ஆக்டிவாகவே செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தனது மகள் நைனிகாவுடன் தற்போது மாஸ் போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியிருக்கிறார்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தெறி“ படத்தில் விஜய்யின் மகள் வேடத்தில் குட்டி குழந்தையாக நடித்தவர்தான் நைனிகா. தனது க்யூட்டான சிரிப்பு மற்றும் குறும்புத்தனத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்ற இவர் தற்போது தனது அம்மாவின் தோள் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் தன்னைப்போலவே இருக்கும் தனது மகளுடன் நடிகை மீனா எடுத்துக்கொண்ட போட்டோஷுட் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் பெரிதும் கவனம் பெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments