கணவர் இறந்த ஒரே வாரத்தில் படப்பிடிப்புக்கு வந்துவிட்டாரா மீனா?

  • IndiaGlitz, [Thursday,July 07 2022]

நடிகை மீனாவின் கணவர் இறந்து ஒரு வாரம் மட்டுமே ஆகிய நிலையில் தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த பல மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி காலமானார். அவருக்கு இது ஈடுசெய்யாத இழப்பு என்பதால் அவர் இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர ஒருசில மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீனா தனது கணவரை இழந்து ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டதாக கூறி படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் உண்மையில் இந்த வீடியோ கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த விளம்பர படப்பிடிப்பில் மீனா கலந்து கொண்டது என்பதும் அதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த படப்பிடிப்பை தற்போது நடந்தது மாதிரி ஒரு சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே நடிகை மீனா தனது குடும்பம் குறித்த எந்தவித வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

நித்யானந்தாவை திருமணம் செய்ய விரும்பும் தமிழ் நடிகை: என்ன காரணம் தெரியுமா?

நித்தியானந்தாவை திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவரை திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய பெயரை கூட மாற்ற தேவை இல்லை என்றும் தமிழ் நடிகை ஒருவர் கூறியுள்ளார். 

'பாரதி கண்ணம்மா' அருண் பிரசாத் காதலி இந்த சீரியல் நடிகையா? வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியலில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்று வருவது 'பாரதி கண்ணம்மா' என்பதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டது என்பதும் தெரிந்ததே.

'என்னை கொடுமைப்படுத்துகிறார்': 73 வயது மாமனார் மீது புகார் அளித்த 'அண்ணாத்த' நடிகை!

73 வயது மாமனார் தன்னை கொடுமைப்படுத்துவதாக 38 வயது 'அண்ணாத்த' படத்தில் நடித்த நடிகை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பொன்னியின் செல்வன்' அப்டேட்: 'குந்தவை' த்ரிஷாவின் அட்டகாசமான போஸ்டர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றன

'பொன்னியின் செல்வன்' டிரைலர் ரிலீஸ் தேதி இதுவா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள்