நடிகை மீனா இவ்வளவு சூப்பரா பாடுவாரா? அதுவும் சித்ராவுக்கு இணையாக.. வைரல் வீடியோ..
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை மீனா மிகச் சிறந்த நடிகை என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் சிறப்பான பாடகி என்பது இப்போதுதான் வீடியோ ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
விஜய் டிவியில் நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீனா அந்த நிகழ்ச்சியில் பாடிய குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் மேடைக்கு வந்து ’எஜமான்’ படத்தில் இடம்பெற்ற ’ஆலப்போல் வேலப்போல்’ என்ற பாடலை பாடினார். மீனாவுடன் இணைந்து சித்ராவும் பாடினார் என்பதும் சித்ராவுக்கு இணையாக சிறப்பாக மீனாவும் அந்த பாடலை பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீனா சிறப்பாக பாடியதை கேட்டு நடுவர்களில் ஒருவரான பாடகர் மனோ ஆச்சரியம் அடைந்து மீனாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இது குறித்த வீடியோவை விஜய் டிவி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் மீனா இவ்வளவு சூப்பராக பாடுகிறார் என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். பாடகி சித்ராவும் நடிகை மீனாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Woww..கேட்கவே இனிமையா இருக்கு 😍 | Aalapol Velapol Song | #Chitra & #Meena 😃
— Vijay Television (@vijaytelevision) August 12, 2023
சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... #SuperSingerJunior9 #SSJ9 #SuperSinger #VijayTelevision #VijayTV pic.twitter.com/LLZ7Vsfhky
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com