தயவு செய்து இதை மட்டும் நிறுத்தி கொள்ளுங்கள்: மீனா வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தயவு செய்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பினால் தான் இறந்தார் என்ற செய்தி ஊடகங்களில் பரவிய நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், நடிகை குஷ்பு உள்பட ஒருசிலர் மீனாவின் கணவர் மரணம் கொரோனாவால் இல்லை என்றும் அவரது நுரையீரல் மற்றும் இதய பாதிப்பு காரணமாகவே காலமானார் என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒருசில ஊடகங்கள் மீண்டும் தவறான செய்தியை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை மீனா, கணவரின் இறப்புக்கு பின்னர் தனது சமூக வலைதளத்தின் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் ’எனது அன்பு கணவர் வித்யாசாகர் இறப்பால் நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். இந்த தருணத்தில் அனைத்து ஊடகங்களும் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்து அனுதாபம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் இதற்கு மேல் தவறான தகவலை தயவு செய்து வெளியிட வேண்டாம்.
இந்த கடினமான நேரத்தில் எங்களுடைய குடும்பத்திற்கு பக்கபலமாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி. கடைசிவரை எனது கணவரை காப்பாற்ற முயன்ற மருத்துவ குழுவிற்கும், முதல் அமைச்சர் அவர்களுக்கும், சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கும் எனது நன்றி. மேலும் என்னுடைய குடும்ப நண்பர்கள், ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments