கணவர் இறப்புக்கு பின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட மீனா.. உடனிருப்பவர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை மீனா கணவரின் இறப்புக்கு பின்னர் முதல் முறையாக ஒரு ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி காலமானார். இதனை அடுத்து அவர் பெரும் சோகத்துடன் இருந்த நிலையில் அவரது தோழிகளான கலா மாஸ்டர், ரம்பா உள்பட பலர் அவருக்கு ஆறுதல் கூறி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நடிகை மீனா சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்த நிலையில் தற்போது ஒரு ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகை மீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகை குஷ்பூவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 90s கிட்ஸ் பாடல்களை போட்டியாளர்கள் பாட இருப்பதை அடுத்து குஷ்பூ மற்றும் மீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோவை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அதிரடி Performance.. 🔥
— Vijay Television (@vijaytelevision) January 28, 2023
சூப்பர் சிங்கர் Season 9 - இன்று மற்றும் நாளை மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 pic.twitter.com/FYJdbASav6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments