தோழிகளின் முயற்சி வெற்றி: பழைய மீனாவாக மாறிய வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Thursday,September 22 2022]

கணவர் மறைவால் கடந்த சில வாரங்களாக சோகத்தில் இருந்த நடிகை மீனா தோழிகளின் முயற்சியால் தற்போது மீண்டும் உற்சாகமாக இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.

குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வரும் நடிகை மீனா, கமல் ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவால் மீனாவும் அவரது மகளும் பெரும் சோகத்தில் இருந்தனர். இதனை அடுத்து சோகத்தில் இருந்து மீனாவை மீட்டு கொண்டு வர அவரது தோழிகளான கலா மாஸ்டர், சங்கவி, சங்கீதா, ரம்பா உள்ளிட்டோர் தீவிர முயற்சி செய்தனர். அவரை கட்டாயப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றதாகவும் அதுமட்டுமின்றி சமீபத்தில் மீனாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோழிகள் எடுத்த முயற்சியின் காரணமாக தற்போது மீனா தனது கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீண்டு உள்ளதாக தெரிகிறது. அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கேட்வாக் நடப்பது போன்ற காட்சியை வெளியிட்டுள்ள நிலையில் மீனாவை மீண்டும் பழைய மீனாவாக பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.