நடிகை மீனாவின் கணவர் திடீர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பா?

  • IndiaGlitz, [Tuesday,June 28 2022]

நடிகை மீனாவின் கணவர் திடீரென உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கமல், ரஜினி உள்பட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த நடிகை மீனாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார் என்பதும் இவர் விஜய் நடித்த ’தெறி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சற்றுமுன் உயிரிழந்தார்.

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்றும், நுரையீரல் பிரச்சனையுடன் கோவிட் பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகை மீனாவின் கணவர் திடீரென உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.