தமிழ் நடிகையின் மகனுக்கு கத்திக்குத்து: சென்னையில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பல தமிழ் திரைப்படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை ஒருவரின் மகனை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான மாயாவுக்கு விக்கி என்றமகனும், பாபிலோனா என்ற மகளும் உள்ளனர். இவர்களின் பாபிலோனாவும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை மாயாவின் மகன் விக்கி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்த 8 நபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்று விட்டனர். விக்கிக்கு முதுகு வயிறு மார்பு உட்பட 10 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது ’விக்கிக்கு போதை பழக்கம் இருப்பதாகவும் இதனால் அவர் போதையில் அடிக்கடி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தகராறு செய்ததாகவும் அவ்வாறு தகராறு செய்த ஒருவரின் நண்பர்கள் 8 பேர்கள்தான் விக்கியின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்கி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விக்கி தரப்பிலிருந்து காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்றாலும் இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே சமீபத்தில் விக்கி குடிபோதையில் அவரது தெருவில் தகராறில் ஈடுபட்டார் என்றும் அப்போது தட்டிக்கேட்ட காவல் துறை அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார் என்றும் இது குறித்து வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments