சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் கற்று கொடுக்கும் நடிகை!

  • IndiaGlitz, [Sunday,March 06 2022]

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நடிகை ஒருவர் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன .

சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை அனுதீப் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் எஸ் தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

சிவகார்த்திகேயனின் 20வது படமாக உருவாகி இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக சென்னை, புதுவை, லண்டன் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது .

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை மரியா என்பவர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை மரியா ஆங்கில டீச்சர் வேடத்தில் நடிப்பதாகவும் அவர் சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரமாண்டமாக இப்படம் உருவாகிறது. சுரேஷ் புரடொக்சன்ஸ் சார்பில் திரு.சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ் D.ராமாநாயுடு அவர்களின் மகன்) நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) மற்றும் Shanthi Talkies அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தை வழங்குகின்றனர்.