மலர் காட்டுக்குள் பூத்து நிற்கும் பிரபல நடிகை… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,July 13 2023]

மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களிடைய கொண்டாடப்பட்டு வரும் நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் லண்டன் சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட நிலையில் அவை வைரலாகி வருகின்றன.

மலையாள சினிமாவில் 17 வயதில் அறிமுகமான நடிகை மஞ்சுவாரியர் 44 வயதான நிலையிலும் முன்னணி நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறார். 1995 இல் ‘சாக்சியம்‘ எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்தார்.

இதையடுத்து திருமண வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்த அவர் கடந்த 2014 இல் ‘ஹவ் வோல்ட் ஆர் யூ‘ எனும் திரைப்படத்தின் மூலம் ரிஎண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தற்போது மலையாளத்தில் மீண்டும் முன்னணி நட்சத்திரமாக வலம்வருகிறார்.

மலையாளத்தைத் தவிர தமிழில் கடந்த 2019 இல் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளத்தைத் தவிர நடிகை மஞ்சுவாரியர் தற்போது இந்தி சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். 44 வயதான பிறகும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடிகை மஞ்சுவாரியர் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ‘லலிதம் சுந்தரம்‘, ‘ஜாக் அண்ட் ஜில்‘, ‘மேரி அவாஸ் சுனோ‘ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

மேலும் ‘சென்டி மீட்டர்‘, ‘புட்டேஜ்‘ போன்ற திரைப்படங்களில் நடித்துவரும் இவர் லண்டனில் நடைபெற்ற ஆனந்த் டிவி விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து இயக்குநர் ரமேஷ் பிஷரோடி மற்றும் நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோருடன் சேர்ந்து லண்டனை சுற்றிப் பார்த்து வருகிறார்.

அந்த வகையில் லெவண்டர் பூக்கள் வளர்ந்து நிற்கும் ஒரு தோட்டத்தில் நடிகை மஞ்சுவாரியர் நின்ற படியே புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மலர்க் காட்டிற்குள் அழகிய மலரைப் போன்றே இருக்கிறீர்கள் என்று அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை மஞ்சு வாரியர் நடிகை என்பதைவும் தவிர அவர் சிறந்த பரதநாட்டிய கலைஞர், சிறிய வயதிலேயே குச்சுப்புடி நடன அரங்கேற்றத்தையும் செய்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித்தின் தாக்கத்தால் அவர் பைக் ஓட்டக் கற்றுக்கொண்டு பைக் டிரைவ்விற்காக புதிய பைக் ஒன்றை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.