அஜித்துக்கு தான் இதுக்கு காரணம்.. புதிய அவதாரம் எடுத்த மஞ்சுவாரியர்..!

  • IndiaGlitz, [Saturday,February 18 2023]

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மஞ்சு வாரியார் தற்போது பிஎம்டபிள்யூ பைக் வாங்கியிருக்கும் நிலையில் இதற்கு அஜித்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் அவருடன் அதிரடி ஆக்சன் கேரக்டரில் நடித்திருந்தவர் மஞ்சுவாரியர் என்பதும் அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்குமார் லடாக் பகுதியில் பைப் பயணம் செய்த போது அதில் மஞ்சுவாரியரும் கலந்து கொண்டார் என்றும் இது குறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் மஞ்சு வாரியார் பைக் ஓட்ட கற்றுக் கொண்டார் என்பதும் அதற்கான லைசன்ஸ் எர்ணாகுளம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெற்றுக் கொண்ட புகைப்படம் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அவர் பிஎம்டபிள்யூ பைக்கை வாங்கி உள்ளார். பைக் ஷோரூம் சென்று பைக் வாங்கும் வீடியோவை வெளியிட்டுள்ள மஞ்சுவாரியர், அஜித்திற்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.