தமிழ் திரையுலகின் இளம் நடிகைக்கு கொரோனா பாதிப்பு: மூச்சுத்திணறல் என டுவிட்டரில் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் இளம் நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் இந்த பாதிப்பில் இருந்து தான் மீண்டு வருவேன் என சமூக வலைதளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மனிஷா யாதவ், அதன்பின் ’ஆதலால் காதல் செய்வீர்’ ’திரிஷா இல்லைனா நயன்தாரா’ ’சென்னை 28 பாகம்-2’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் நடிகை மனிஷா யாதவுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இது குறித்து மனிஷா யாதவ் தனது சமூக வலைதளப் பதிவில் ’எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஆனால் விரைவில் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை எதுவும் மோசமான விளைவு இல்லை, ஆனால் எப்போதாவது லேசாக மூச்சு திணறலை ஏற்படுகிறது. கொரோனாவில் இருந்து மொத்தமாக தாண்டி வருவதே நல்லது. என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Positive++ .. Isolated.But also very positive of quick recovery ??. Personally not so bad so far ,except the breathlessness sometimes..But I would say theres nothing better than totally skipping this .So #stayathome #StaySafeStayHealthy & #MaskUpIndia #COVID19India
— Manisha Yadav (@ManishaYadavS) April 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments