தமிழ் திரையுலகின் இளம் நடிகைக்கு கொரோனா பாதிப்பு: மூச்சுத்திணறல் என டுவிட்டரில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

தமிழ் திரையுலகின் இளம் நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் இந்த பாதிப்பில் இருந்து தான் மீண்டு வருவேன் என சமூக வலைதளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மனிஷா யாதவ், அதன்பின் ’ஆதலால் காதல் செய்வீர்’ ’திரிஷா இல்லைனா நயன்தாரா’ ’சென்னை 28 பாகம்-2’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் நடிகை மனிஷா யாதவுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இது குறித்து மனிஷா யாதவ் தனது சமூக வலைதளப் பதிவில் ’எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஆனால் விரைவில் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை எதுவும் மோசமான விளைவு இல்லை, ஆனால் எப்போதாவது லேசாக மூச்சு திணறலை ஏற்படுகிறது. கொரோனாவில் இருந்து மொத்தமாக தாண்டி வருவதே நல்லது. என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

More News

மன்சூர் அலிகானின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: கைது செய்யப்படுவாரா?

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆதாருடன் பான் கார்டை இணைக்காமல் விட்டால் என்ன நடக்கும்? விளக்கம் அளிக்கும் வீடியோ!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் கார்ட் வைத்து இருக்கும் இந்திய குடிமகன்கள் அனைவரும் கட்டாயம் தங்களது பான் கார்ட் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு  தெரிவித்து இருந்தது.

பட்டாசு கடை விபத்தில் மகன்களைப் பறிக்கொடுத்த தாய்… ரயில் முன்பாய்ந்த பரிதாபம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசுக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு அந்த விபத்தில் கடையின் உரிமையாளர்

நோ எண்ட்ரி போர்ட் மாட்டிய நித்தியானந்தா… இந்தியர்களுக்குமா இந்த அவலம்?

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் 2 ஆவது அலை தீவிரம் பெற்று இருக்கிறது

தல தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாசிடிவ்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாக செயல்பட்டு வரும் எம்.எஸ்.தோனியின் பெற்றோருக்கு கொரோனா