விஜய் பட நாயகிக்கு 28ஆவது பிறந்தநாள்… நெட்டிசன்களே வியக்கும்  வைரல் பிக்ஸ்!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “மாஸ்டர்”. இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சினிமா துறையில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். மேலும் சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களினால் பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

நடிகை மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த “பேட்ட” திரைப்படத்தில் நடித்திருந்தாலும் “மாஸ்டர்” திரைப்படம் அவருக்கு பெரிய டிரேக்கையே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது எனலாம். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டு வரும் புதுப்படத்தில் நடிகை மாளவிகா இணைந்து நடித்து வருகிறார்.

இதைத்தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு எனப்பல மொழிகளிலும் கால்பதித்து, பெரிய ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தன்னுடைய 28 ஆவது பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் முக்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக கூறியிருக்கும் நடிகை மாளவிகா அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

அந்தப் புகைப்படங்களுக்கு மத்தியில் ஒரு ஆண் நண்பர் நடிகை மாளவிகா மோகனை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர், “இதைப் பார்த்தால்தான் பொறாமையாக இருக்கிறது“ எனக் கமெண்ட்ஸ் பதிவிட்டு உள்ளார். இன்னும் சிலர் இதெல்லாம் சரியில்ல... என்பதுபோல் கமெண்ட் கூறியுள்ளனர். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனின் பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

படு ஸ்லிம் ஆகிவிட்ட நடிகை குஷ்பு… திடீர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா?

“தர்பார்“ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் சிறுத்தை சிவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “அண்ணாத்த” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

பதக்கத்தை தவறவிட்ட… ஹாக்கி வீராங்கனைகளுக்கு ஜார்கண்ட் கொடுக்கும் அசத்தலான பரிசு!

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறினர்.

'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் இதுவா? வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது 'டான்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்ட போதிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

90களில் ஹிட் நாயகி… மகள்களுடன் இருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “அழகன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்