இதுவரை இல்லாத புது கெட்டப்பில் நடிகை மல்லிகா ஷெராவத்… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமா வட்டாரத்தில் கவர்ச்சி புயல் என அழைக்கப்பட்டவர் நடிகை மல்லிகா ஷெராவத். தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையால் இந்தியா முழுக்கவே பிரபலமானவர். இந்தியாவைத் தவிர சீனா மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இப்படி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை மல்லிகா முதல் முறையாக ராணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “தசாவதாரம்“ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். அடுத்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “ஒஸ்தி“ படத்தில் ஒருபாடலுக்கு மட்டும் ஆடியிருந்தார்.
தற்போது இயக்குநர் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் “நாக்மதி“ எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நடிகை மல்லிகா ஷெராவத் இரட்டை வேடங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தி மற்றும் தமிழ் மொழியில் உருவாகி வரும் இந்தப் படத்தைக் குறித்து அதிக எதிர்பார்ப்பை வெளியிட்டு வரும் நடிகை மல்லிகா இந்தப் படத்திற்காக எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில் நடிகை மல்லிகா இதுவரை கிளாமர் வேடங்களில் தோன்றியதையடுத்து முதல் முறையாக ராணி வேடத்தில் காட்சியளிக்கிறார். ராணி மட்டுமல்லாது போர்முனையில் போராடும் இளவரசியாகவும் இதில் வலம்வருகிறார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இயக்குநர் வி.சி.வடிவுனையான் இயக்கத்தில் “நாக்மதி“ திரைப்படத்தை தவிர “பாம்பாட்டம்“ திரைப்படத்திலும் அவர் நடித்துவருகிறார். அதேபோல தெலுங்கில் Contract, Police Tiger போன்ற திரைப்படத்திலும் இந்தியில் Zeenat என்ற திரைப்படத்திலும் அவர் நடித்துவருகிறார்.
சமீபத்தில் நடிகை மல்லிகா ஷெராவத் இந்தியாவை விட்டுவிட்டு லாஜ்ஏஞ்சல் நகரில் வீடு வாங்கி செட்டில் ஆனது குறிப்பிடத்தக்கது. காரணம் இந்தியாவில் மிகவும் அவமரியாதையை சந்தித்தாகவும் எதிர்மறையுடன் வாழவிரும்பாமல் அமெரிக்காவிற்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments