18 வயதில் அஜித்துடன் நடித்த நடிகையின் 42வது பிறந்த நாள்: வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
18 வயதில் அஜித் நடித்த திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடித்த ’உன்னை தேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை மாளவிகா. அதன் பின்னர் ’ஆனந்த பூங்காற்றே’ ’ரோஜாவனம்’ ’வெற்றிக்கொடிகட்டு’ ’பேரழகன்’ ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ ’சந்திரமுகி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை நடிகை மாளவிகா திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் அவர் ஒருசில படங்களில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று அவர் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு அவருடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். தனக்கு வாழ்த்துக்களை நேரில் தெரிவித்தவர்களிடம் புகைப்படங்களையும், பிறந்த நாளன்று கேக் வெட்டிய புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மாளவிகா கடந்த 2009 ஆம் ஆண்டு ’அறுபடை’ என்ற திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் என்பதும், அதன் பின்னர் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout