மாளவிகா மோகனின் காதலர் இவரா? பாத்டப்பில் செம்ம ரொமான்ஸ் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை மாளவிகா மோகனன் தனது நண்பர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தி அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் விஜய்யின் ’மாஸ்டர்’ தனுஷின் ’மாறன்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ’தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சற்று முன் அவர் தனது நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இருவரும் பாத்டப்பில் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நட்பு என்பது கனவுகளால் உருவாக்கப்படும் நபர்கள். எப்பொழுதும் உங்கள் நம்பிக்கையை பெற்றிருப்பார்கள். உங்கள் மோசமான நாட்களில் அருகே அமர்ந்திருப்பார்கள், ஒரு நிமிடம் உங்கள் முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தால் கூட அதை படிக்கக் கூடிய திறமை உள்ளவர்கள். நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் உடனே உங்களுக்கு கை கொடுக்க வருவார்கள், அப்படி ஒரு நபர் தான் இவர்’ என்று கூறி அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மாளவிகாவுடன் இருக்கும் அந்த நபர் அபினவ் என்பதும், அவரும் திரையுலகில் தான் இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments