கடற்கரையில் காற்று வாங்கும் மாஸ்டர் பட நடிகை… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் “பேட்ட“ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் தளபதி விஜய் நடித்த “மாஸ்டர்“ படத்தில் மூலம் முன்னணி நடிகை என்ற உயரத்தை எட்டிவிட்டார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவந்த மாஸ்டர் படத்தில் மாளவிகா ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து இருந்தாலும் ரசிகர்கள் இவருக்கு ஏகபோக வரவேற்பை அளித்து இருந்தனர். இதனால் நடிகர் தனுஷ்ஷுடன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார்.
நடிகர் தனுஷ்ஷுன் 43 ஆவது திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் கதநாயகியாக நடிக்க நடிகை மாளவிகா மோகனன் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்நிலையில் இந்தியில் பெரிய இயக்குநரான ரவி உதாய்வர் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் சித்தான்த் சதுர்வேதிக்கு ஜோடியாகவும் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது போட்டோ ஷுட் நடத்தி அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் நின்று காற்று வாங்குவது போல ஒரு காட்சியை படமாக்கி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் அதில், “சில நேரங்களில் சிறிய விஷயங்கள் உங்கள் இதயத்தில் பெரிய இடத்தைப் பிடித்து விடும்” என்ற கேப்ஷனையும் பதிவிட்டு உள்ளார்.
சினிமா உலகிற்கு வந்து ஒருசில வருடங்களே ஆன நடிகை மாளவிகா மோகனன் இதுவரை மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து இருக்கிறது. தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் கடற்கரை காற்று வாங்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com