மாஸ்டர் பட நாயகி சின்ன வயதில் எப்படி இருந்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் “பேட்ட“ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக “மாஸ்டர்” படத்தில் நடித்து இருந்தார். இதன்மூலம் ரசிகர்களிடையே வரவேற்கத்தக்க நடிகையாக உருவெடுத்தார். அதோடு சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ஹாட்டான புகைப்படங்களால் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே வளர்த்துள்ளார்.
அந்த வகையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் தனது சிறிய வயதில் ஒரு பேன்சி டிரெஸ் நிகழ்ச்சிக்காக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் “வாவ்“ சொல்லி அவரைப் பாராட்டி வருகின்றனர்.
முதலில் மலையாளப் படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா அடுத்து தெலுங்கு, கன்னடம், தமிழ் தற்போது ஹிந்தி எனப் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அந்தந்த மொழிகளில் சில படங்களில் மட்டுமே இவர் நடித்து இருந்தாலும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடுகிறது. அந்த வகையில் தமிழில் மாஸ்டருக்குப் பின்பு நடிகர் தனுஷ்ஷுடன் இணைந்து “டி43” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். நடிகர் தனுஷ்ஷின் 43 ஆவது திரைப்படம் இது என்பதால் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சோஷியல் மீடியாவில் அவரது குட்டி வயசு போட்டோ வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout