close
Choose your channels

காதலில் விழுந்த மாஸ்டர் மாளவிகா… இணையத்தைக் கலக்கும் வீடியோ!

Saturday, January 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகை மாளவிகா மோகன் காதலில் விழுந்துள்ளதாக கேப்ஷனில் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். சமீபகாலமாக இவரது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோ ரசிகர்களை மேலும் பிரமிக்க வைத்துள்ளது.

மலையாள சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் பின்னர் தமிழ், தெலுங்கு எனத் தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் மேலும் பிரபலமாகியுள்ளார். குறிப்பாக நடிகர் விஜய்யுடன் இணைந்து “மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்தற்குப் பின்பு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகவிட்டது. இதைத்தொடர்ந்து சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக செயல்பட்டுவரும் இவர் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பிரமிக்க வைக்கிறார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு பிகினி புகைப்படம் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்ற நிலையில் தற்போது காதலில் விழுந்ததாகக் குறிப்பிட்டு நீச்சல் குளத்தில் இருந்தபடி கடலை ரசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நடிகை மாளவிகா மோகனன் “மாஸ்டர்“ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ்ஷுடன் இணைந்து “மாறன்“ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் “யுத்ரா“ எனும் ஆக்ஷன் படத்திலும் இவர் நடித்துவருகிறார். அதேபோல தெலுங்கில முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து “ஹீரோ’‘ எனும் படத்தில் நடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment