சரக்கு பாட்டிலுடன் மாஸ்டர் பட நடிகையின் அட்டகாசமான போஸ்…வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
“பேட்ட” படத்தில் பூங்கொடி கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நடிகை மாளவிகா மோகனனை பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம். ஆனால் தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசான “மாஸ்டர்” படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தற்போது அனைத்து ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஒருவராக மாறிவிட்டார். அதிலும் வெள்ளித்திரை என்றில்லாம் இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்காகவே பல லட்சக்கணக்கான ரசிகர்களை இவர் பெற்று இருக்கிறார்.
அந்த வகையில் நேற்றுமுன்தினம் பச்சை நிற உடையில் இவர் நடத்திய போட்டோ ஷுட் ரசிகர்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது கையில் சரக்கு பாட்டிலை வைத்துக் கொண்டு “மாலை 5 மணிக்கு கார்டன் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு கிளாஸ் டானிக்“ என்ற கேப்ஷனுடன் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் “என்னமா மாளவிகா உன்னை டீ டோட்டலர்னு நினைச்சேனே? “, “என்ன சிம்ரன் குடிக்கிறியா?’‘ எனப் பல கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ்ஷுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வரும் இவர் இந்தியில் பிரபல இயக்குநர் ரவி உதய்வார் இயக்கத்தில் “யுத்ரா” எனும் படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களிடம் வேற லெவல் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ‘’Gordon’s London” எனும் ஜின் பாட்டிலை வைத்து இவர் கொடுத்த போஸ் தற்போது இணையத்தில் படு டிரெண்டாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments