மாளவிகா மோகனின் வேற லெவல் வொர்க்-அவுட்: வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,April 21 2023]

நடிகை மாளவிகா மோகனன் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பிறகு தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ ஆகிய படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது சியான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் பிரபலமானவர் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தனது ஃபாலோயர்களை உற்சாகப்படுத்த கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் மாளவிகா மோகனன் சற்றுமுன் ஜிம்மில் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் பதிவு செய்த ஒரு சில சில நிமிடங்களே ஆகி உள்ள நிலையில் ஏராளமான கமெண்ட்கள் மற்றும் லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.